vijay-tv-serial-kollywood-latest-news update
தமிழ் சின்னத்திரையில் சீரியலுக்கு பிரபலமான தொலைக்காட்சி சேனல்களாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றவை இருந்து வருகின்றன. இந்த சேனல்களில் பணியாற்றும் நடிகர்கள் சேனல்கள் மாறிமாறி பணி புரிவது வழக்கம்.
ஜீ தமிழ் நடிகர்கள் விஜய் டிவிக்கு செல்வதும் விஜய் டிவி நடிகர்கள் ஜீ தமிழுக்கு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. விஜய் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு பறந்து சென்ற நிலையில் மீண்டும் அங்கிருந்து தாய் வீடான ஜீ தமிழுக்கு திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது அதே போல் மீண்டும் ஒரு நடிகர் ஜீ தமிழுக்கே யூ டர்ன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தின் சீதை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் நந்தா.
இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய கண்ணே கலைமானே சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியல் கிளைமாக்ஸை நெருங்கி நகர்ந்து வரும் நிலையில் சீரியல் முடிந்தது மீண்டும் ஜீ தமிழுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜீ தமிழில் ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியலில் நந்தா மாஸ்டர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1006" gal_title="Actress Iswarya Menon Latest Stills"]
[Best_Wordpress_Gallery id="1005" gal_title="Balti Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1004" gal_title="Actor Sarvhaa Stills"]