Vijay to join with famous Tollywood director
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
சமீபத்தில் இயக்குனர் வம்சி சென்னையில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், இந்தக் கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற தோழா படத்தை வம்சி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…