vijay-in-thalapathy-69-movie-director-details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற லியோ படத்தைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தளபதி விஜய் சினிமா கடமையை முடித்துவிட்டு மக்களுக்காக பணியாற்ற இருப்பதாகவும் அதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை எந்த கட்சிக்கும் ஆதரவும் கிடையாது என அறிவித்திருந்தார். வெங்கட் பிரபு படத்தை முடித்து மேலும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
தளபதி விஜயின் கடைசி படமான இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாகவும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
இது யாரும் எதிர்பாராத கூட்டணி என ரசிகர்கள் பலரும் இந்த தகவல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8