தளபதி 68 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

மாநாடு படம் போல இந்த படமும் டைம் லூப் படமாக இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில் இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா மற்றும் கஸ்டடி படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி செட்டி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் விஜயின் பிறந்த நாளில் படத்தின் டைட்டில் நாயகி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

vijay in thalapathy 68 information leaked on the internet
jothika lakshu

Recent Posts

Modha Rathri Official Trailer

Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar

2 hours ago

Ayyayo Ammaadi Lyrical Video

Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…

3 hours ago

Irumudi Official Tamil Trailer

Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…

3 hours ago

Manamae Pogumo Lyrical Video

Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…

3 hours ago

Pyaar Prema Kalyanam Official Trailer

Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India

3 hours ago

கழுத்தில் அறுவை சிகிச்சை… அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஷகீலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…

4 hours ago