அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star Studio18, A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ மூலம் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், இயக்குநர் அட்லீ மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி ‘ஜவான்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். செல்வகுமார் SK ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர். முன்னணி நட்சத்திரக் கூட்டணி மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Suresh

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

22 hours ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

22 hours ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago