தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அவருடன் இணைந்து ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெய்வேலியில் நடந்த வந்தபோது படப்பிடிப்பின் இறுதிநாளில் விஜய் கேரவன் மீது ஏறி ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படத்தை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தேங்க்யூ நெய்வேலி என குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்புகைப்படம் இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த புகைப்படத்தை 135.8 லட்சம் பேர் பகிர்ந்து 356.4 பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் எடுத்த ஒரே ஒரு செல்பி புகைப்படம் இப்படி ஒரு சாதனையை படைத்து இருப்பது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…