Vijay going abroad soon
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட ஒரு மாதம் ரஷியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது அரசியல் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படமாக உருவாக உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு…
பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது…
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த…
Kattazhagi Video Song | Idhayam Murali | Atharvaa | Thaman S | Kayadu Lohar |…