vijay fans comment goes viral update
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற அக்டோபர் 19-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய்தத், மிஷ்கின், அர்ஜுன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் அளித்த பேட்டியில், “லியோ படம் நன்றாக வந்துள்ளது. தம்பி விஜய்யும் படத்தை பார்த்துள்ளான். பார்த்து விட்டு நன்றாக உள்ளது என்று பாராட்டியுள்ளான். படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று கூறியிருந்தார். விஜய்யை ஒருமையில் பேசியதற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ள விஜய் ரசிகர்கள், மிஷ்கின் மரணம் அடைந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தளபதியை இன்னும் அவன், இவன் என்று பேசுவதா? அப்படி சொல்லி கூப்பிடும் லெவலில் அவர் இல்லை. தளபதி அந்த நிலையையெல்லாம் தாண்டி பல வருஷம் ஆகிவிட்டது. பொது இடத்தில் பேசும்போது பார்த்து பேசுங்கள். தளபதி வருங்கால முதல்-அமைச்சர். அதனால் பொது இடத்தில் மரியதை கொடுத்து பேசுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
விஜய் ரசிகர்கள் பகிர்ந்த போஸ்டர்
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…