JGM படத்தின் வெளியான டைட்டில் போஸ்டர்.. வைரலாகும் தகவல்

நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!

வரலாறு படைக்கும் கூட்டணி மீண்டும் இணைந்து, ரசிகர்களுக்கு தங்களது அடுத்த மிஷனை 3.8.2023 அன்று தரவுள்ளார்கள்.

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சரித்திரம் படைக்கும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM” படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன் மொழி இந்திய பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் காண்பிக்கும், இது அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்!

JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், மற்றுமொரு அட்டகாசமான பொழுதுபோக்கு விருந்தாக இப்படம் இருக்கும்.

படம் பற்றி இயக்குனர் பூரி ஜெகன்னாத் பகிர்ந்துகொண்டதாவது.., “எங்கள் அடுத்த திரைப்படமான ‘JGM’ பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. JGM ஒரு வலுவான கதைகொண்ட, அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர்”

படம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியதாவது.., “JGM எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இப்படம் மிகவும் சவாலான திரைக்கதை கொண்டது. இந்த கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது, இப்படம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொடும். இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவர்களின் கனவுத் திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். சார்மி மற்றும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். JGM படத்தில் எனது கதாபாத்திரம் இதுவரை நான் செய்திராத புதுமையான பாத்திரம், மேலும் இது பார்வையாளர்களிடம் ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி கூறுகையில், “இந்த அற்புத திரைப்படமான JGM படத்தில் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் தட்டிவிடும் என்று ஸ்ரீகாரா ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2022 துவங்கி, உலகின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.

 

jothika lakshu

Recent Posts

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

6 hours ago

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

7 hours ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

14 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

15 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

15 hours ago