vijay-antony-twitter-post-viral update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாகவும் வளம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனால் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனியே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மலேசியா மற்றும் லங்காவி தீவில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பைக் போட்டை ஓட்டும் போது விஜய் ஆண்டனி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவருக்கு முகம் மற்றும் உடம்பில் பலமான காயங்கள் ஏற்பட்டு பற்கள் உடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். அவரை படகுழுவினர் லங்காவியல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அதன் பிறகு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி சமீபத்தில் உடல் நலம் தேறியுள்ளதாக தனது புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் தற்போது மீண்டும் தனது உடல் நலம் குறித்து மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன், என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் அதில் வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்
அன்புக்கு நன்றி” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை தந்து வைரலாகி வருகிறது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…