Vignesh Shivan opens up about Nayanthara marriage
விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் பொது இடங்களுக்கு ஜோடியாக செல்வது, வெளிநாட்டுக்கு ஒன்றாக சுற்றுலா செல்வது என்று தான் இருக்கின்றனர்.
அதை அவர்கள் வெளிப்படையாகவே போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, ரசிகர்கள் வைரல் ஆக்கி விடுகின்றனர். சமீபத்தில் அவர்கள் துபாய்க்கு ஜோடியாக புத்தாண்டு கொண்டாட சென்று இருந்தனர். மேலும் விக்னேஷ் சிவன் “பிப்ரவரி 22ம் தேதி (22.2.22) திருமணம் செய்ய பலரும் நினைக்கிறார்கள. அந்த தேதியை வீணாக்க வேண்டாம்” என இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு இருந்தார்.
அதனால் விக்கி – நயன் திருமணம் அந்த தேதியில் தானோ என இணையத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் திருமணம் எப்போது என கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் சொன்ன அவர் ‘நாங்கள் எதையும் ரகசியமாக வைக்கவில்லை, திருமணம் செய்யத்தான் வேண்டும். நடக்கும்போது சொல்கிறோம்’ என பதில் கூறி இருக்கிறார்.
அதனால் பிப்ரவரி 22 அவர்கள் திருமணம் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…