vignesh-shivan-movie latest update
“2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதில், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவிவந்தது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில், விக்னேஷ் சிவன் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இப்படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.”,
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…