விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான சூப்பர் தகவல்.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரவபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இம்மாதம் வரும் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படத்தின் மற்ற பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

jothika lakshu

Recent Posts

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

5 hours ago

சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…

6 hours ago

குழந்தை பிறப்பை முன்கூட்டியே திட்டமிட்ட சமந்தா… வைரலாகும் பழைய பேட்டி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…

6 hours ago

‘தலைவர் 173’ படப்பிடிப்பு தொடக்கம்… அஸ்வத் மாரிமுத்துவுடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…

6 hours ago

‘கருப்பு’ படத்திற்கு விஜய் தான் முதல் காரணம்… சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…

6 hours ago

மீண்டும் இணையும் ‘பிரேமம்’ கூட்டணி… நிவின் பாலியின் 50வது படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…

6 hours ago