வேட்டையன் திரைவிமர்சனம்

என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக இருக்கும் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மஞ்சு வாரியருடன் வாழ்ந்து வருகிறார். தீர விசாரித்து துணிச்சலுடன் ரவுடிகளை என்கவுண்டர் செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் துஷாரா விஜயன், பள்ளியில் ரவுடிகள் சிலர் கஞ்சா பதுக்கி
வைத்து இருப்பதாக ரஜினிக்கு தகவல் கொடுக்கிறார். இதை அறிந்த ரஜினி ரவுடிகளை என்கவுண்டர் செய்கிறார். தைரியமாக ரவுடிகளை பற்றி துஷாரா விஜயனுக்கு பாராட்டு கிடைக்கிறது. மேலும் சென்னையில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு பணிக்கு செல்கிறார்.

சில நாட்களில் துஷாரா விஜயன் மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். போலீஸ் விசாரணையில் அசல் கோளாறு செய்ததாக கூறுகிறார்கள்.இதையறிந்த ரஜினி சென்னைக்கு வந்து அசல் கோளாறை என்கவுண்டர் செய்கிறார். ஆனால், அது போலி என்கவுண்டர் என்று தெரிய வருகிறது.

இறுதியில் துஷாரா விஜயனை உண்மையில் கொலை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? உண்மையான குற்றவாளியை ரஜினி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரஜினி, மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நடனம் ஆடி கவர்ந்து கவர்ந்து இருக்கிறார். குற்றவாளியை பிடிக்க தீவிரம் காட்டுவதில் மாஸ் செய்து இருக்கிறார்.

ரஜினி மனைவியாக நடித்து இருக்கும் மஞ்சு வாரியர் அழகால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக நடனத்தில் கட்டி இழுத்து இருக்கிறார்.பள்ளி ஆசிரியராக நடித்து இருக்கும் துஷாரா, பார்ப்பவர்களை பரிதாப பட வைத்து இருக்கிறார். கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார் பகத் பாசில். குறிப்பாக காமெடி என்று ரசிக்க வைத்து இருக்கிறார்.

ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அமிதாபச்சன் போலீஸ் உடையில் மிடுக்காக நடித்து அசத்தியிருக்கிறார் ரித்திகா சிங் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ராணா. அபிராமி, அசல் கோளாறு உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

கல்வியில் நடக்கும் மோசடியை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் டி.ஜே ஞானவேல் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யத்துடனும் விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி இருக்கிறார். என்கவுண்டர் சரியா? தவறா? என்ற விஷயத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார். கல்வி வியாபாரமாக்கப்படுவதை மிகவும் துணிச்சலுடன் கூறியதற்கு பாராட்டுக்கள் பலருக்குத் தெரியாத விஷயத்தை தெளிவாக காட்டி இருக்கிறார் பணக்காரர்களுக்கு கல்வி வியாபாரமாக மாறக்கூடாது என்று ஆணித்தனமாக சொல்லி இருக்கிறார். பல காட்சிகள் மாஸாக அமைத்து ரசிகர்களுக்கு தீனி போட்டு இருக்கிறார்.

அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம் பின்னணி இசையில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

கதிரின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தும் அருமை.

லைகா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

jothika lakshu

Recent Posts

விரைவில் தொடங்க இருக்கும் ஜோடி ஆர் யூ ரெடி.. வெளியான ப்ரோமோ வீடியோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…

2 hours ago

ஜெயலர் படம் குறித்து பேசிய ராஜகுமாரன்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…

2 hours ago

மங்காத்தா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

2 hours ago

ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…

5 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

23 hours ago