Veteran Actress Sowcar Janaki Passes Away at 94
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 94.
1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சௌகார் ஜானகி, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர்.
ஆந்திராவைச் சேர்ந்த சௌகார் ஜானகி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சௌகார் ஜானகி இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கலைத்துறையில் நீண்ட காலம் சிறப்பான பங்களிப்பை வழங்கிய சௌகார் ஜானகிக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…