Veteran Actor Anupam Shyam Dies At 63
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் ஷ்யாம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. பாலிவுட்டில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
‘மன் கீ அவாஸ்’ எனும் தொலைக்காட்சி தொடரில் இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. தற்போது அந்த தொடரின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதனிடையே கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மும்பை கோரேகான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…
பிக் பாஸ் முதல் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…