vendhu-thaninthathu-kaadu 2 latest update
தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிம்பு, ராதிகா, நீரவ் மாதவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
இரண்டு பாகங்களாக வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் கொஞ்சம் மெதுவாக செல்கிறது, சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறது மற்றபடி படத்தின் கதை பலமாக உள்ளது என விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்பது குறித்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. மக்கள் மத்தியில் முதல் பாகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க பட குழு திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. படக்குழு எதிர்பார்த்த வெற்றியை முதல் பாகம் பெற்றுவிட்டால் நிச்சயம் இரண்டாம் பாகம் வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது.
படத்தின் வசூல் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இரண்டாம் பாகம் குறித்த உறுதியான தகவல்களை இன்னும் சில தினங்களில் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…