பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் விஷாலின் வீரமே வாகை சூடும் .. உற்சாகத்தில் ரசிகர்கள்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதியான இன்று வெளியாகிறது.

அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ள நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறார் நடிகர் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

இப்படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் 560க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆந்திராவில் 750க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், கன்னடத்தில் மிக பெரிய வெளியீட்டாக 180 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் பிரமாண்ட வெளியாகிறது. உலகம் முழுவதுமாக சேர்த்து மொத்தம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வீரமே வாகை சூடி திரைப்படம் வெளியாகிறது. இதனால் விஷால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Veerame Vaagai Soodum movie Release Details
jothika lakshu

Recent Posts

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

14 hours ago

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

15 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

15 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

15 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

16 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

16 hours ago