பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா பாரதிக்கு கொடுக்கப்போகும் அதிர்ச்சி..? இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லஷ்மி தன் அம்மாவிடம் அப்பா வராறா என கேட்க டாக்டர் சார் வராதா என உளறி கொட்டினார் குமார். உடனே அப்பாவுக்கும் டாக்டருக்கும் என்ன சம்பந்தம் என லட்சுமி கேட்க இல்லம்மா இப்போ ஹேமாவை கூப்பிட போறோம் இல்லையா அதனால டாக்டரும் வராறா என்று கேட்டேன். என்ன குழப்புகிறீர்கள் என லஷ்மி கேட்க குமார் மாமா எப்பவும் அப்படித்தான் என கண்ணம்மா கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பா எல்லாம் போச்சு போட்ட திட்டமெல்லாம் நாசமா போச்சு என கதறி அழுகிறார். இங்கே பாரு நீயே விட்டு இருக்கக்கூடாது பின்னாடியே போயிருக்கணும் சர்வீஸ் அபார்ட்மெண்ட் எவ்வளவு இருக்கு அங்க போய் தங்கி இருக்கலாம் என சாந்தி கூறுகிறார். அவன் மட்டும் நான் கிளம்பி போய் இருக்கலாம் கூட அவன் பொண்ணு வச்சுகிட்டு சுத்துறானே என வெண்பா கூறுகிறார்.

காரில் வந்து கொண்டிருந்த பாரதி வழியில் காரை நிறுத்தி விட்டு வெளியே இறங்கி சென்று சொந்த வீட்டுக்கும் போக முடியல பிரண்டு வெண்பா வீட்டுக்கும் கண்ணம்மா போக விடமாட்டாரு. பணம் செல்வாக்கு டாக்டர் வேலைனு எவ்வளவோ இருந்தும் நடுத்தெருவில் நிற்கிறேன் என பாரதி புலம்புகிறார்.

அதன்பிறகு ஹேமா கீழே இறங்கி வந்து என்ன டேடி தனியா பேசிகிட்டு இருக்கீங்க என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என சமாளித்து விடுகிறார். உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே டாடி உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம் என கேட்க அதெல்லாம் இல்லை ஏன் டாடி கேட்கிறீர்கள் என ஹேமா கேட்கிறார். இல்ல வெண்பா வீட்டுக்கு போகலாம்னு கூட்டிட்டு போயிட்டு அங்கு தங்காமல் வந்துட்டேனே அதனால கேட்கிறேன் என சொல்கிறார். ஓ அதுவா அதனால எனக்கு சந்தோஷம்தான். எனக்கு அந்த வெண்பாவை அதான் உங்க பிரண்டு பிடிக்கவே பிடிக்காது என ஹேமா கூறுகிறார்.

நாம இப்படியே ஏதாச்சு ஹோட்டலுக்குப் போய் ரூம் எடுத்து தங்கலாம் என பாரதி கேட்க அதெல்லாம் வேண்டாம் எனக்கு வீட்ல தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி ஆதவன் இவங்க கூட இருந்தா தான் ஜாலி நம்ம வீட்டுக்கு போகலாம் என சொல்லி விடுகிறார். பாரதி சரி என வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார்.

பிறந்தநாளில் பாரதிக்கு கண்ணம்மா கொடுக்கப்போகும் அதிர்ச்சி.. கதறி அழும் வெண்பா – பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்
வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு ஹேமாவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு பாரதி வெளியவே நிற்கிறார். உள்ளே போன ஹேமாவை கொஞ்சம் விட்டு உங்க அப்பா எங்க என சௌந்தர்யா கேட்கிறார். அவர் உள்ளவரை கூச்சப்பட்டு விட்டு வெளியேறி இருக்கிறார் என ஹேமா கூறுகிறார். பிறகு அகிலன் இது நம்ம வீடுடா வா உள்ள என கூப்பிட பாரதியும் உள்ளே வருகிறார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார் சௌந்தர்யா. என்னை எல்லாரும் என்ன நக்கலடிக்கறீங்களா என பாரதி கடுப்பாகிறார்.

பிறகு கண்ணம்மா வீட்டுக்கு போன சௌந்தர்யாவிடம் லட்சுமி எங்க அம்மாவோட பிறந்தநாளுக்கு நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும் அன்னைக்கு எங்க அப்பா யார் என்று காட்டுவேன் என எங்க அம்மா சொல்லி இருக்காங்க. முதல்முறையா நானும் எங்க அப்பாவை பார்க்க போறேன் அவரும் என்ன முதல்முறையா பார்க்க போறார் என லஷ்மி சொல்வதைக் கேட்டு சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு லஷ்மியை கடைக்கு அனுப்பி விட்டு சௌந்தரியா கண்ணம்மாவிடம் என்ன இது என கேட்கிறார்‌‌. லஷ்மி வளர்ந்து கொண்டே போறா அவனுக்கும் புரிய ஆரம்பிச்சுடுச்சு உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என கண்ணம்மா கூறுகிறார். பாரதி எப்படி பர்த்டே ஃபங்ஷனுக்கு வருவான் என சௌந்தர்யா கேட்க அதுக்கு நீங்கதான் உதவி பண்ணணும் என்று கூறுகிறார். நான் உதவி பண்ண ரெடியா இருக்கேன் ஆனா அவன் சப்போர்ட் பண்ணனுமே என சௌந்தர்யா சொல்கிறார். அதற்குள் கடைக்கு போனோம் லஷ்மி வந்துவிடவே இங்கே இருந்து வீட்டிற்கு கிளம்புகிறார் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 04.02.22
jothika lakshu

Recent Posts

MYSAA Teaser

MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films

30 minutes ago

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago