வீர தீர சூரன் – பகுதி 2 திரை விமர்சனம்

மதுரையில் தன் மனைவி துஷாரா மற்றும் குழந்தைகளுடன் மளிகை கடை நடத்தி வருகிறார் கதாநாயகனான விக்ரம். இவர் இதற்கு முன் பெரிய ரவுடியான ப்ருத்வி கேங்கில் முக்கிய நபராக இருந்து சண்டையெல்லாம் வேண்டாம் என மளிகை கடை நடத்தி வருகிறார். மறுபக்கம் காவல் அதிகாரியான எஸ்.ஜே சூர்யா கேங்ஸ்டராக இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் அவரது தந்தை ப்ருதிவியை என்கவுண்டர் செய்வதற்காக முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் சுராஜை காப்பாத்துவதற்காக எஸ்.ஜே சூர்யாவை கொல்வதற்கு ப்ருத்வி நடிகர் விக்ரமின் உதவியை அணுகிறார். ஆனால் முதலில் விக்ரம் இதற்கு ஒத்துக்க மறுக்கிறார். பின் பிருத்வி மிகவும் கெஞ்சி கேட்டப்பிறகு இதற்கு சம்மதிக்கிறார்.ஓர் இரவில் விக்ரம் எஸ்.ஜே சூர்யாவை கொள்வதற்கு திட்டம் போட.. சுராஜை கொல்வதற்கு எஸ்.ஜே சூர்யா திட்டம் போட.. அடுத்து என்ன ஆனது? உண்மையில் விக்ரம் யார்? விக்ரமின் பின்னணி என்ன? எஸ்.ஜே சூர்யாவிற்கும் சுராஜ் குழுவிற்கும் என்ன பகை? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனான சீயான் விக்ரம் நேச்சுரல் Subtle – ஆன நடிப்பை மிகவும் ரசிக்கும்படியாக நடித்துள்ளார். கதாநாயகியான துஷாரா விஜயன் கொடுத்த கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார். மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு அவருக்கென உரிய பாணியில் நடித்து கலக்கியுள்ளார். எஸ். ஜே சூர்யா அவரது வில்லத்தனத்தை காட்டி மிரட்டியுள்ளார். குறிப்பாக சீயான் விக்ரம் ஆக்‌ஷட் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.

ஓர் இரவில் முன்னாள் பகையை தீர்க்கும் கதையாக இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.யு அருண்குமார். கதை தொடக்கத்தில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தியுள்ளது படத்தின் பெரிய பலம். இதுவரை நாம் பார்த்திராத பரிமானத்தை நடிகர்களின் நடிப்பை திரையில் கொண்டு வர முயற்சித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு விருந்து வைத்தது போல் அமைந்துள்ளது.

ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். விக்ரமின் பிஜிஎம்-ற்கு திரையரங்குகள் அதிருகிறது.

பெரும்பாலான திரைப்படத்தின் காட்சிகள் இரவில் நடப்பதால் மிகவும் தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். குறிப்பாக ௧௬ நிமிட சிங்கிள் ஷாட் காட்சி அற்புதம் பார்க்கும் போது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

HR Pictures நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,

veera dheera sooran part-2 movie review
jothika lakshu

Recent Posts

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

14 hours ago

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…

15 hours ago

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…

15 hours ago

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…

16 hours ago

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி?

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…

16 hours ago

அஜித் 64 படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு.. அப்டேட் கொடுத்த ஆதிக்..!

அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

20 hours ago