varisu-ranjithame-song-promo-is-most-viewed-on website
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வரும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை மூன்று லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இந்த மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வெளியாகும் என படக்குழு காலையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை படக்குழு பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ என்ற விஜய் பாடியுள்ள பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. தற்போது இப்பாடல் இணையத்தில் வெளியாகி 11 மணி நேரத்தில் 5.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் 613k லட்சம் லைக்குகளை வேகமாக கடந்த ப்ரோமோ என்ற சாதனையும் படைத்துள்ளது. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்துப் பாடலின் ப்ரோமோ வீடியோவின் சாதனையும் இந்த ரஞ்சிதமே பாடல் முறியடித்துள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…