varisu movie latest update
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பிற்கு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா என பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது தமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்தப்படத்தின் கம்போசிங் வேலைகள் தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவருடன் பாடலாசிரியர் விவேக் இடம் பெற்றுள்ளார்.
இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…