records-of-rajinithame-song-in-varisu movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு.
தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ சற்று முன் வெளியானது. இந்த பாடல் வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் இது தெலுங்கு படம் ஒன்றில் இடம் பெற்றுள்ள பாடலின் காப்பி என சர்ச்சை எழுந்துள்ளது.
ரவி தேஜா சுருதிஹாசன் ஆகியோர் இணைந்து நடித்த கிராக் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ் பிரியாணி என்ற பாடலும் இந்த பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிராக் படத்திற்கும் தமன் தான் இசையமைத்தார்.
இதனால் தமன் தான் இசையமைத்த படத்தின் பாடல் மெட்டையே காப்பியடித்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார் என கூறி வருகின்றனர்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…