Vanitha leaving the Bigg Boss couple show
நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலானவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என்பதை உலகமே அறியும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரபல தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது.
தொலைக்காட்சி நிறுவனத்தோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது தொழில்முறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு, எனக்கு அநீதி நிகழ்த்தப்பட்டது. பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள்.
பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்’ என்றார்.
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…
https://youtu.be/8M_qU0YXY-I?t=7
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…