Valimai vs Annaatthe
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்.
இவ்விருவரும் படங்களுமே சென்ற ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
ஆனால் இதில் ரஜினியின் பேட்ட படத்தை விட அஜித்தின் விஸ்வாசம் படம் குடும்ப ரசிகர்களால் பெரும் அளவில் ரசிக்கபட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ரஜினி அண்ணாத்த படத்திலும் மற்றும் அஜித் வலிமை படத்திலும் நடித்து வருகின்றனர்.
கொரானா தாக்கம் காரணமாக இந்த இரு படத்தின் படப்பிடிப்பும் நிறுத்திவைக்க பட்டுள்ளது. ஆனால் வரும் நவம்பர் மாதம் இந்த இரு படங்களின் மீதம் உள்ள படப்பிடிப்புகள் துவங்கும் என தெரியவந்துள்ளது.
மேலும் ரஜினியின் அண்ணாத்த படம் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அதே போல் தல அஜித்தின் வலிமை படமும் நவம்பரில் படப்பிடிப்பு துவங்கி கண்டிப்பாக 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை வைத்து பார்க்கும் பொழுது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் தல அஜித்தின் மோதவுள்ளார்கள்.
ஆனால் இந்த முறை யார் வெற்றி பெற போகிறார் ரஜினியா இல்லை அஜித்தா என பொறுத்திருந்து பார்ப்போம்..
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…