valimai Update When Explanation on behalf of Ajith
நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினர்.
அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு …
படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து “வலிமை” படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும். என்று சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…