valimai team join again
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.
நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் இணைந்த இந்த கூட்டணி அதனை தொடர்ந்து ‘வலிமை’ படத்திற்காக இணைந்தது. அதன் பிறகு மூன்றாவது முறையாக அஜீத் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைகிறது. உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி இப்படம் பேசவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதரபாத்தில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…