valimai shooting update
அஜித் – எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். இந்த காட்சியை படமாக்கியதும் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும்.
ஆனால் கொரோனா அச்சுறுத்தலால், வலிமை படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா விதிமுறைகளால் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சிகளை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…