Valimai FDFS Issue in Rohini Theatre
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை கலைமகன் முபாரக் அவர்களின் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க உரிமையாளர் விநியோகஸ்தரிடம் பிரச்சனை இருப்பதாகவும் இதனால் அதிகாலை காட்சி திரையிடுவதில் சிக்கல் உருவாக்கி இருப்பதாக பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து படத்தை விநியோகம் செய்யும் கலைமகன் முபாரக் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #Rohini திரையரங்கிற்கு 4 & 7 மணி காட்சிகள் இல்லை என்பதை தல ரசிகர்களுக்கு மிக வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறோம் #kasi #vetri & #Gkcinemas திரையரங்குகளில் 4 மணி ஸ்பெஷல் காட்சி திரையிடப்படுகிறது பார்த்து மகிழுங்கள் 2022ன் முதல் திருவிழாவை கொண்டாடுங்கள் ???? #Valimai #AjithKumarSir எனக் குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ரோகினி திரையரங்கில் வலிமை படத்தின் அதிகாலை காட்சிகள் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1