Arabic Kuthu Song Shocking Update
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து நடிகர் சிவ கார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார்.
டார்க் காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அனிருத் இசையில் உருவான இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வரிகளில் உருவான செல்லம்மா என்ற பாடல் படத்தில் இடம் பெறவில்லை. படம் முடிந்த பிறகு இறுதியாக தான் பாடல் சேர்க்கப்பட்டு இருந்தது.
பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இந்த பாடல் படத்தில் இப்படி இறுதியாக இடம்பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதே பாணியில் தற்போது விஜய் ரசிகர்களை ஏமாற்ற உள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
ஆமாம், பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடல் திரைக்கதை வேகம் காரணமாக படத்தில் இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது. செல்லம்மா பாடலைப் போலவே இந்த பாடலும் படம் முடிந்த பின்னரே படத்தில் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதனை விஜய் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…