“பவதாரணி சாதாரண குழந்தை அல்ல அது ஒரு தெய்வக் குழந்தை”: வடிவேலு இரங்கல்

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு வருதத்துடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், \”மாரீசன் படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்துவிட்டது. அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு ஒன்றும் புரியவில்லை. 47 வயது பெண். அவர் இறந்த செய்தி நெஞ்சமெல்லாம் நொறுங்கிவிட்டது. பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் இன்னைக்கு நொறுங்கிப்போய் இருக்கிறார்கள். தைப்பூச நாளில் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் இளைப்பாருவார்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்\” என அழுதபடி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

vadivelu-latest speech-goes-viral
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

3 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

3 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

3 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

4 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

5 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

5 days ago