கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ளார்.
எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கையே கிடைக்கவில்லை. அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை.
எனவே அவர் நேற்று காலை தான் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட நேற்று அவர் மருத்துவமனையில் இறந்திருக்கிறார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…