தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது வாடிவாசல் திரைப்படம்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அதன் பிறகு டெஸ்ட் போட்டோஷூட் நடைபெற்ற அதற்கான வீடியோக்களும் வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதன் பிறகு வெற்றிமாறன் விடுதலை படத்தின் முதல் பாகம் இரண்டாம் பாகம் ஆகியவற்றின் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.
நடிகர் சூர்யாவும் சூரரை போற்று, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்து முடித்ததோடு தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கியுள்ள கங்குவா படத்திலும் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே பிரச்சனை அதனால் வாடிவாசல் திரைப்படம் ட்ராப் எனவும் வேறு நடிகரை வைத்து வெற்றி மாறன் படத்தை இயக்கப் போகிறார் எனவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது பஞ்சாயத்து அனைத்தும் முடிந்து படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹீரோவாக அறிவித்தபடி நடிகர் சூர்யா தான் நடிக்க போகிறார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சூர்யா மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…