Upendra Joins Atharvaa’s Next Film
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள் நடிக்கும் ஒரு சுயாதீன (இண்டிபெண்டன்ட்) திரைப்படத்தின் படப்பிடிப்பை அவர் நிறைவு செய்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பிறகு, படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் முழுநீள கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாபாத்திரத்திற்காக அவர் தீவிர உடற்பயிற்சி, நடன மற்றும் சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான ‘ரியல் ஸ்டார்’ உபேந்திரா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியான ‘பெத்தி’ திரைப்படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கூடுதலாக…
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் அவரது 55-வது திரைப்படத்திற்கு ‘ஓம்: அத்தியாயம் ஒன்று’ என…
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்யை, முன்னணி நடிகை சமந்தா ரூத் பிரபு சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில்…