தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் இன்று சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
அதற்கு முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் உழைப்பும் விடாமுயற்சியும் தான் காரணம். மேலும் தளபதி விஜய்க்கு அடுத்ததாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்ததாக துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். படத்திற்கான வேலைகளில் தேசிங்கு பெரியசாமி இறங்கி இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் போன்ற ஒரு கதை சிவகார்த்திகேயனுக்கு கச்சிதமாக பொருந்தும் என கூறி வருகின்றனர்.
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…