Trouble for Vijay’s ‘Thalapathy 65’ shoot by Corona
விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த மாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு வந்தது. அங்கு விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகளை இந்த வாரம் படமாக்க இருந்தனர்.
ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் படப்பிடிப்பை நடத்த படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…