டூரிஸ்ட் ஃபேமிலி திரை விமர்சனம்

இலங்கையில் ஏற்பட்ட வறுமை பிரச்சனையில் சிக்கி தவித்த சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் 2 மகன்களுடன் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஆவணங்கள் இல்லாமல் ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சிம்ரனின் அண்ணன் யோகி பாபு மூலமாக சென்னையில் இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டில் கேரளாவை சேர்ந்தவர்கள் எனக்கூறி வாடகைக்கு குடியேறுகிறார்கள்.குடியேறிய சில நாட்களிலேயே காலனி பொது மக்களின் குடும்பத்தில் ஒருவராக சசிகுமார் குடும்பம் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு சசிகுமார் குடும்பம் தான் காரணம் என போலீஸ் அதிகாரி சென்னைக்கு வருகிறார்.இறுதியில் சசிகுமார் குடும்பத்தின் நிலை என்ன ஆனது? போலீஸ் அதிகாரி சசிகுமார் குடும்பத்தை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சசிகுமார், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு மகிழ்ச்சியான குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நடுத்தர குடும்பத் தலைவனாக காட்சிகளில் உணர்வோடு மட்டுமின்றி கலகலப்பாக நடித்து அசத்தி இருக்கிறார் சசிகுமார். குறிப்பாக குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கிறது. இலங்கை தமிழ் பேசும் பொறுப்பான குடும்ப தலைவியாக நடித்து, கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் சிம்ரன். பிரச்சினைகளை தாங்கி பிடித்து நடிப்பில் மிரட்டியிருப்பது மட்டுமின்றி ஆல்தோட்ட பூபதி நானடா என்ற பாடல் இசைக்கு அவரது நடனம் கைதட்டி ரசிக்க வைக்கிறது. படத்துக்கு பெரிய நகைச்சுவையை தருவது இளைய மகனாக நடித்துள்ள கமலேஷ். சுட்டித்தனத்துடன் அவரது நடிப்பு சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.யோகி பாபு வரும் காட்சிகள் கூடுதல் பலம். மகனாக வரும் மிதுன்ஜெய்சங்கர் பக்கத்து வீட்டுக்காரர்களாக எம்.எஸ்.பாஸ்கர், குமாரவேல், ஸ்ரீஜா ரவி, பக்ஸ், யோகலட்சுமி, ரமேஷ், திலக் ஆகியோர் நடிப்பு பாராட்டுக்குரியது.

இலங்கையில் இருந்து தமிழகம் வருவோர் சந்திக்கும் பிரச்சினைகளை காட்சிகளாக்கி தத்ரூபமாக செதுக்கி காட்டியிருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவனித். முதல் படமாக இருந்தாலும் அனுபவ இயக்குனர் போல் காட்சிகளில் உணர்வு, நகைச்சுவை கலந்து ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்தை பொழுதுபோக்காக கொண்டு சென்றுள்ளார். ஒருசில லாஜிக் மீறல்கள், தேவை இல்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம்.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

சான்ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையையும் கதையோடு பயணித்து ரசிக்க வைத்து இருக்கிறது.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,

jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

3 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

3 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

10 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

10 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

10 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

11 hours ago