ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன, ஒவ்வொரு வாரமும் ப்ரைம் டைம் சீரியல்கள் ரேட்டிங்கில் கணிசமான முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது.

அந்த வகையில் இன்று வியாழக்கிழமை என்பதால் பார்க் நிறுவனம் டிவி சேனல்களின் ரேட்டிங் நிலவரங்களை வெளியிட்டுள்ளது, அதன்படி ஜீ தமிழின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி, கார்த்தியின் சவால் என எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகிய கார்த்திகை தீபம் சீரியல் 5.11 என்ற ரேட்டிங் புள்ளியுடன் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

சிவராமன் மீது போடப்பட்ட பொய் புகார், ஆதாரம் இல்லாததால் தம்பிக்கே தண்டனை கொடுக்க தயாரான ரகுராம். கடையில் நொடியில் ஆதாரத்துடன் வந்து காப்பாற்றிய மாயா என்று பரபரப்பாக ஒளிபரப்பாகிய சந்தியா ராகம் சீரியல் 4.52 என்ற புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முத்துபாண்டியை விருந்துக்கு கூட்டி வந்து மூத்த மாப்பிள்ளை என வெங்கடேஷை வரவைத்து வெறுப்பேற்றிய ஷண்முகம் என அதிரடி கலாட்டாவாக ஒளிபரப்பாகிய அண்ணா சீரியல் 4.38 என்ற ரேட்டிங்குடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

ராணியின் உயிருக்கு வந்த ஆபத்து, தமன்னா வேடத்தில் வந்து புது வில்லியை வதம் செய்த பொம்மி என்று திகில் கதையுடன் ஒளிபரப்பாகிய நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.64 என்ற ரேட்டிங்குடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

வள்ளியின் வில்லத்தனம், வீராவின் சபதம், அக்காவுக்காக ஆட்டோ டிரைவராக மாறிய கதை என எமோஷனல் டிராமாவாக ஒளிப்பரப்பாகிய வீரா சீரியல் 3.15 என்ற ரேட்டிங்குடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

இதுமட்டுமின்றி மற்ற சீரியல்களும் நல்ல ரேட்டிங்குடன் முன்னேற்றத்தை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

top-5-serials-of-zee-tamil-week-16-in-2024-here
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

2 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

2 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

2 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

2 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

2 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

20 hours ago