மேஷம்: இன்று உற்றார்-உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மனசஞ்சலங்கள் அதிகரிப்பதால் அமைதிக்குறைவு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமங்களையே சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ரிஷபம்: இன்று கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றால் பெரிய சிக்கல்களையும், வம்பு வழக்குகளையும் சந்திப்பீர்கள். கொடுத்த கடன்களை வசூலிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். அரசியலில் மறைமுக எதிரிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
மிதுனம்: இன்று நிதானம் தேவை. கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றிக்கொள்வது உத்தமம். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கடன்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கடகம்: இன்று உங்களுக்கு எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணவிவகாரங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சிம்மம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். மனைவிக்கு வயிற்றுவலி, மாதவிடாய் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் நிலவுவதால் மனநிம்மதி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
கன்னி: இன்று தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சரியான நேரத்திற்கு உணவுண்ண முடியாத நிலை, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றாலும் பாதிக்கப்பட நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
துலாம்: இன்று கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலையில் ஓரளவுக்கு பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகளால் கடன்வாங்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
விருச்சிகம்: இன்று திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங்கியவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு பழுதடைவதால் வீண்விரயங்களும் உண்டாகும். புத்திரர்களால் மனசஞ்சலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதிக் குறையும். சேமிக்க முடியாமல் போகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
தனுசு: இன்று கொடுக்கல்- வாங்கல் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியாமல் போகும். கொடுக்கல்-வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
மகரம்: இன்று பெரிய முதலீடுகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்குக் கொடுத்த பணத்தைத் திரும்பப்பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
கும்பம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
மீனம்: இன்று சிலருக்கு பொருட்தேக்கமும் உண்டாகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கைநழுவிப்போகும். தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்வதில் தடைகள் ஏற்பட்டு அவர்களாலும் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…