Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 25– 08 – 2023

மேஷம்: இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கடகம்: இன்று கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

சிம்மம்: இன்று எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவீர்கள். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கன்னி: இன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்: இன்று சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்: இன்று கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

தனுசு: இன்று தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்தகாலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்: இன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. மனநிம்மதி கிடைக்கும். எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கும்பம்: இன்று பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மீனம்: இன்று தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

 

admin

Recent Posts

“நான் சூனியக்காரியா..?” – முன்னாள் காதலரை நினைத்து வேதனை பகிர்ந்த கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…

20 hours ago

விஜய்யின் ‘பஞ்ச்’ வசனம்… சத்யராஜ் சர்ச்சைக்கு சிபிராஜின் பதிலடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…

20 hours ago

மனதளவில் பாதிக்கப்பட்ட தருணம் – ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்த பேச்சு

R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…

20 hours ago

வா… வா… என் தேவதையே… குட் நியூஸ் சொன்ன அட்லீ!

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக திகழும் Atlee மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல்,…

20 hours ago

பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியக் கொடி… சவாலான பந்தயத்தில் அசத்திய அஜித் குமார்!

திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார்…

20 hours ago

Kara Official Trailer

Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…

1 day ago