Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 24– 11 – 2023

மேஷம்: இன்று கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்: இன்று செய்யாத தவறுக்கு உங்களை சிக்க வைக்க யாரேனும் முயற்சிப்பார்கள். எனினும் உங்களது சாதுர்யத்தால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்: இன்று இயந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வீண் செலவுகளை தவிர்த்தல் நலம். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்: இன்று தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் – மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சிம்மம்: இன்று கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி: இன்று புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

துலாம்: இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

விருச்சிகம்: இன்று சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெரும் பொருள்வரவை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தனுசு: இன்று குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்: இன்று தெய்வ காரியங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாடும் முக்கியம். சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். கவனம் தேவை. பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமான முடிவு வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்: இன்று புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

மீனம்: இன்று பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பையோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியாலஜி சம்பந்தப்பட்ட துறைகளில் பயில்வோருக்கு மிகச் சிறப்பான காலமாகும். விரும்பிய பாடம் கிடைக்காவிட்டால் கிடைத்த பாடத்தை விருப்பத்துடன் படியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

 

admin

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

18 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

18 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

20 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

20 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

21 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

21 hours ago