Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 24– 01 – 2024

மேஷம்: இன்று தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்: இன்று உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்: இன்று இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்: இன்று உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்: இன்று குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், பொருளாதார வளமும் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி: இன்று பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாத பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்: இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்: இன்று முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு: இன்று எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்: இன்று நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தமப்திகளிடையே அன்பு மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்: இன்று வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

 

admin

Recent Posts

Thalaivar Thambi Thalaimaiyil Teaser

Thalaivar Thambi Thalaimaiyil Teaser | Jiiva | Nithish Sahadev | Kannan Ravi | Deepak Ravi

3 hours ago

Happy Birthday Lyric Video

Happy Birthday Lyric Video | Revolver Rita | Keerthy Suresh | Sean Roldan | JK…

3 hours ago

Aan Paavam Pollathathu Official Trailer

Aan Paavam Pollathathu Official Trailer | Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |…

3 hours ago

OTHERS Teaser

OTHERS Teaser | Aditya Madhavan, Gouri | Anju Kurian | Abin Hariharan | Ghibran |…

5 hours ago

முருங்கைக்கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!

முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

8 hours ago

கம்ருதீன் சொன்ன வார்த்தை,ரம்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

14 hours ago