மேஷம்: இன்று வெளியூர் பயணம் செல்ல நேரலாம். புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அழகு சாதனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. அலர்ஜி போன்று ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 5
ரிஷபம்: இன்று பாராட்டுகள் கிடைக்கும். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலால் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே ஒப்பந்தங்கள் நிறைவேறும். ஆனாலும் அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல பெயர் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
மிதுனம்: இன்று தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3, 5, 7
கடகம்: இன்று எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பண வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 6, 9
சிம்மம்: இன்று எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
கன்னி: இன்று ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5, 9
துலாம்: இன்று அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனாலும் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உங்களின் கவனக்குறைவால் மேலதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 2, 7
விருச்சிகம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முறையில் காரியங்கள் கை கூடி வரும். ஆனாலும் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. உடன் பணி புரிபவர்களால் நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5
தனுசு: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் நடக்கும். ஆனாலும் மூன்றாவது மனிதரின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
மகரம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன, மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9
கும்பம்: இன்று படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் சொந்தங்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7
மீனம்: இன்று பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் சூரியன் 6ல் மறைவு பெறுவதால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். மேலிடத்தின் கனிவான பார்வை பெறுவீர்கள். முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…