Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 19– 04 – 2023

மேஷம்: இன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்: இன்று காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். மனக்கவலை ஏற்படலாம். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செய்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்: இன்று கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். பிள்ளைகளிடம் மென்மையாக நடந்து கொள்வது நல்லது. எந்த காரியத்தையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்: இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கன்னி: இன்று எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமை உண்டாகும். அதிக உழைப்பும், அதற்கேற்ற ஆதாயமும் இருக்கும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் காரிய தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்: இன்று பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உறவினர் நண்பர்கள் மூலம் கிடைக்கும். வாக்கு சாதூரியத்தால் நன்மை கிடைக்கும். எதையும் யோசித்து செய்வீர்கள். பயணம் மூலம் சாதகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

விருச்சிகம்: இன்று தொழில் வியாபாரத்திற்கு தேவையான நிதி வசதி பெருகும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

தனுசு: இன்று குடும்பத்தில் உங்களது மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களின் அன்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மகரம்: இன்று எதையும் யோசித்து செய்வது நன்மைதரும். பயணங்களினால் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் கிடைக்கும். சக மாணவர்களிடையே மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்: இன்று மன நிம்மதி கிடைக்கும். பணகஷ்டம் குறையும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். நீதி, நியாயமாக பேசினாலும் பிடிவாத குணமும் இருக்கும். காரியங்களில் தாமதபோக்கு காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்: இன்று எல்லாவற்றிலும் ஒரு பயம் உண்டாகும். தூக்கம் குறையும். மற்றவர்களிடம் பகை ஏற்படா வண்ணம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

 

admin

Recent Posts

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

24 hours ago

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…

24 hours ago

இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா

இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…

24 hours ago

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’ வெளியிட திட்டம்?

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…

24 hours ago

‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்

'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…

24 hours ago

Uyire Uyire – Lyrical video

https://youtu.be/qPaPA3AQ4JI?si=rIh8FG_BJwv1wjsy

1 day ago