மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆரோக்யம் திருப்தியாக இருக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
ரிஷபம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
மிதுனம்: இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
கடகம்: இன்று வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். கிரகசூழ்நிலை அருமையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் உண்டாகும். எதை செய்தாலும் ஒரு குறிக்கோளுடன் செய்வீர்கள். செலவும் அதிகரிக்கும். அதே வேளையில் பணவரவும் உண்டாகும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
சிம்மம்: இன்று மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
கன்னி: இன்று சரக்குகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பீர்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோர் மிகுந்த லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
துலாம்: இன்று குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மேல்பதவி செல்வதற்கு எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். இடமாற்றம் உறுதிபடுத்தப்படும். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
விருச்சிகம்: இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7
தனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5
மகரம்: இன்று பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
கும்பம்: இன்று உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக ஊழியர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பணியின் நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்வீர்கள். டெக்னிக்கல் சார்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3
மீனம்: இன்று புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும். மேலிடத்திடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 9
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…