Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 11 – 01 – 2022

மேஷம்: இன்று ராசிநாதனின் சஞ்சாரத்தால் தொழிலில் காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5

ரிஷபம்: இன்று வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்: இன்று உங்களின் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 2, 3

கடகம்: இன்று மனதில் துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2, 3, 7

சிம்மம்: இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி: இன்று விருப்பங்கள் கைகூடும். ராசிநாதனின் சஞ்சாரத்தால் பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பணவரத்து கூடும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 9, 7

துலாம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9, 3

விருச்சிகம்: இன்று பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9, 3, 7

தனுசு: இன்று திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6

மகரம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4

கும்பம்: இன்று உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 2, 9

மீனம்: இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

admin

Recent Posts

‘சிஸ்டம்’ படத்தில் அபார நடிப்பு: ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருதை வென்ற ஜோதிகா!

அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…

16 hours ago

டேட்டிங் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன்!

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…

17 hours ago

61 வயதில் மூன்றாவது திருமணத்தை உறுதி செய்த அமீர் கான்!

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…

17 hours ago

இசையுலகில் ஆதிக்கம் செலுத்தும் அனிருத்… அடுத்தடுத்து காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள்!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…

17 hours ago

மாஸ் இயக்குநர்களுடன் கைகோர்க்கும் அதர்வா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…

17 hours ago

கட்டா குஸ்தி 2 – திரை விமர்சனம்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…

17 hours ago