Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 10 – 03 – 2022

மேஷம்: இன்று நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

ரிஷபம்: இன்று குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

மிதுனம்: இன்று மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும்.
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

கடகம்: இன்று உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 5, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

சிம்மம்: இன்று மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. புத்தி கூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 4, 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

கன்னி: இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் ஏற்படலாம் கவனம் தேவை. செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்யம் பெறும்.
அதிர்ஷ்ட எண்: 1, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

துலாம்: இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நீங்கள் அவசரமாக எதையும் செய்யக்கூடாது. சுனக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றியடைவதுடன் பணவரத்தும் கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 3, 5, 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

விருச்சிகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

தனுசு: இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

மகரம்: இன்று விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

கும்பம்: இன்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

மீனம்: இன்று நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள். ஒருசிலர் அரசுப்பணியில் சேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

 

admin

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

11 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

11 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

11 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

15 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

15 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

2 days ago