Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 09– 12 – 2023

மேஷம்: இன்று படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தியளிப்பதாக அமையும். குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5

ரிஷபம்: இன்று எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

மிதுனம்: இன்று கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளநிலையில் நடைபெற்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் சற்று சிறப்பான லாபத்தைப் பெறஇயலும் என்றாலும் போட்டி பொறாமைகளையும் சந்தித்தே ஆகவேண்டும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்: இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் கௌரவமான பதவிகளை அடையமுடியும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு உயர்வுகளைப் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வித்திறன் ஓரளவுக்கு உயரும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்: இன்று கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் இக்காலத்திலும் தடைகளையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி: இன்று குடும்பத்திலும் பொருளாதாரத் தட்டுப்பாட்டினாலும் வீண் சஞ்சலங்களும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறையும் என்றாலும் புத்திரவழியில் வீண் செலவுகளும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களினாலும் வீண் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்: இன்று உற்றார்-உறவினர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷனை சந்திப்பீர்கள். உங்களின் திறமைக்கேற்ற உயர்வுகளும் தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க நேரிடுவதால் வேலைப்பளு அதிகரிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

விருச்சிகம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள்விலகி ஒற்றுமை பலப்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறப்பான புத்திரபாக்கியம் அமையும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

தனுசு: இன்று பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். தொழிலில் சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் கடன்களும் படிப்படியாகக் குறையும். புத்திரபாக்கியம் வேண்டு பவர்களுக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகரம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபமடையமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்: இன்று தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், அபிவிருத்தியும் பெருகும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை. தொழிலாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் பல முன்னேற்றப்பாதைகளுக்கு வழிவகுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்: இன்று உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியான நிலையினை அடைவார்கள். தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

admin

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

16 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

16 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

18 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

18 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

19 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

19 hours ago