Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 09– 02 – 2024

மேஷம்: இன்று கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அனுகூலமானப்பலனைப் பெறமுடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தொடர் முயற்சிகளுக்குப் பின்பே சாதகப்பலன் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

ரிஷபம்: இன்று பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிறைவைத்தரும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்: இன்று தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள், போட்டி, பொறாமைகள் போன்றவற்றைச் சமாளிக்க வேண்டிவரும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்: இன்று ஜலத்தொடர்புடைய பாதிப்புகள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். அடிக்கடி உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்: இன்று பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திண்டாட வேண்டியிருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உற்றார், உறவினர்களால் எதிர்ப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும் வீண்விரயங்களும் ஏற்படும். எதிலும் கவனமாக செயல்பட்டால் எதிர்பார்க்காத திடீர் உதவிகளால் எதையும் சமாளிக்கமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி: இன்று எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளால் பிறரின் நம்பிக்கையை இழப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண்பிரச்சினைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். எந்தவொரு புதிய முயற்சியிலும் வெற்றிகளை அடைவதில் தடைகள் ஏற்படும். அபிவிருத்திக் குறைவதால் ஆர்டர்களும் குறையும். வங்கிக் கடன்களைத் திருப்பிச்செலுத்த நெருக்கடி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

விருச்சிகம்: இன்று தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் வீண்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருட்தேக்கம் உண்டாகி லாபம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

தனுசு: இன்று உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புக் குறைவாக இருக்கும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிகளும் பிறர் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் தாமதப்படும். வேலையில் ஈடுபாடற்றநிலை ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகரம்: இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொள்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாமல் எல்லாவகையிலும் நெருக்கடிகள் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்: இன்று பணவரவுகளிலும் தடைகள் நிலவினாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். பிறரிடம் எந்தவொரு பொருளையும் இரவல் வாங்குவதைத் தவிர்க்கவும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். புத்திரர்களாலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்: இன்று பணிபுரியும் பெண்களுக்கு உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

admin

Recent Posts

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

5 hours ago

அப்பா அம்மா பேச்சை கேளுங்க சந்தோஷமா இருங்க.. கேபிஒய் பாலா கொடுத்த அட்வைஸ்..!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…

6 hours ago

போலீஸிடம் இருந்து தப்பிய சூர்யா, நந்தினி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

பெண்கள் எங்கள் எதை கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பார்கள்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு.!!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…

7 hours ago

Vaan Vaan Song

https://youtu.be/9Qyv0EH4QSQ?si=ShoB3XY3-utmKKO2

9 hours ago

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

12 hours ago