Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 08– 11 – 2022

மேஷம்: இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்: இன்று புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்: இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்: இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பெண்கள் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி: இன்று வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்: இன்று நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது. பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு: இன்று வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்: இன்று சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும்.குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு – மனை – வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்: இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு – சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியில் பாராட்டு கிடைக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்: இன்று விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் நேரம் இது. பெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

 

 

admin

Recent Posts

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

3 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

4 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

1 day ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

1 day ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

1 day ago